நாமக்கல் மாவட்டம்
பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தினம்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நண்பர்கள் சார்பாக, பள்ளி வளாகத்தில் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற உன்னத நோக்கத்துடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் மோ. செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப. பாலமுருகன் ஆகியோர் உடற்பயிற்சி நண்பர்களுடன் இணைந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டனர்.