நாமக்கல் இரட்டைக் கொலை: 3 பேர் கைது

63பார்த்தது
நாமக்கல் இரட்டைக் கொலை: 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வடமாநில இளைஞர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் லகூரி, மான்சிங் கக்ராய், தசரத் படிங்க ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆலையில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இருவர் இரு தினங்களுக்கு முன் தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி