நாகப்பட்டினம்: 615 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

1911பார்த்தது
நாகப்பட்டினம்: 615 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று 02. 04. 2024 தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை நகர காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பாப்பா கோவில் பகுதியில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த பழனி(39)த /பெ அய்யாதுரை, நாமக்கல் என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து 615 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் தனிப்படை காவல்துறையினர் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 1)அஜித் குமார்(24) த/பெ ஹரி கிருஷ்ணா, மேலத்தெரு விக்கனாபுரம், 2) திலீப்(26) த/பெ முருகேசன் நெடுங்களம், ஒரத்தூர் 3) வெங்கடேசன்(24) த/பெ வேலுச்சாமி, மேலத்தெரு விக்கனாபுரம், கீழ்வேளூர் ஆகிய மூன்று நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 50 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனங்களை கைப்பற்றியுள்ளனர்.

இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தெரிவித்துள்ளார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி