தேய்பிறை அஷ்டமியை ஒட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு

587பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த சேத்திர பாலபுரத்தில் பழமை வாய்ந்த காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. நாய் வாகனம் இன்றி மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயம் காலபைரவரின் 108 நாம வழியில் சேத்திர பாலையா போற்றி என்று கூறும் அளவிற்கு புகழ் பெற்றதாகும். பைரவரின் சூலாயுதம் இந்த ஆலயத்தில் பிரேகிக்க பெற்றதால் ஆனந்த கால பைரவர் ஆக வீற்றிருப்பதாக புராணம் கூறுகிறது. அர்ஜுனன் வழிபட்டதாக புராணம் கூறும் இந்த காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருமண தடை நீங்கவும், நினைத்த காரியம் கைகூடவும் தேங்காய், பூசணிக்காய், பாகற்காய் இவற்றில் தீபமிட்டு சாலை முதலிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தை சுற்றி 11 சுற்றுகள் வலம் வந்து வழிபாடு நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி