மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாத பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்தி பகவானுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.