சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலைமேடு மற்றும் நாதல்படுகை கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டடம் மற்றும் சீா்காழி வட்டம் புளிச்சக்காடு கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மனநலக் காப்பகக் கட்டடம் உள்பட மொத்தம் ரூ. 21 கோடியே 84 லட்சம் மதிப்பிலான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூடுதல் ஆட்சியா் ஷபீா்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஷ்வரி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள்ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.