வங்கக்கடலில் ஒரு வகையில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மகாபலிபுரம் மற்றும் நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வானகிரி பகுதியில் பைபர் படகுகளை டிராக்டர் கொண்டு மேடான பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.