அச்சத்தில் ஆழ்ந்துள்ள மீனவர்கள்

58பார்த்தது
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவர் கிராமங்களான சின்னங்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடல் சீற்றம் சற்று தணிந்து காணப்படுகிறது. புயலுக்கு முன் நிலவும் அமைதி போல் உள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி