ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டம்

75பார்த்தது
நாகையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை மருத்துவமனையை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நாகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் சுமார் 5 லட்சம் பொதுமக்களின் உணவுகளை மதிக்காமல் ஒரத்தூருக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் தொடர்ந்து நாகையிலேயே பிறப்பு முதல் இறப்பு வரை மற்றும் ஏற்கனவே இருந்த அனைத்து விதமான மருத்துவ சேவைகளும் சகல விதமான வசதியுடன் இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் தொடர்ந்து செயல்பட உடனடியாக தமிழக அரசு உத்தரவிட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நடைபெற்றது


நம்பியார் நகர் மீனவ கிராமம் தலைமையிலான அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனை மீட்பு குழு மற்றும் அனைத்து சமுதாய மக்கள் அனைத்து சேவை சங்கங்கள் அனைத்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வாயிலும் வைப்பிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்தி