கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

75பார்த்தது
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்
நாகை மாவட்டத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாமின் ஐந்தாவது சுற்றை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நாகை மாவட்ட கால்நடைத்துறை சார்பாக மாடுகளிடம் கோமாரி நோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகிறது. அதன்படி நாகை அடுத்த பாலையூர் ஊராட்சியில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஐந்தாவது சுற்றை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். அந்த ஊராட்சியில் உள்ள 300க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் மாடுகளுக்கு தேவையான தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. 5 ஆவது சுற்றாக இன்று தொடங்கிய சிறப்பு முகாம் 21 நாட்களுக்கு நடைபெறும் , பின்னர் ஜூலை 10 ஆம் தேதி விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மாடுகள் மத்தியில் கோமாரி நோய் பரவாமல் தடுக்கும் வகையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அதிகாரிகள், நாகை மாவட்டத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி