நாகை கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது

50பார்த்தது
நாகை மாவட்ட கடல் எல்லையில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடலில் மூழ்கி பிடிக்கும் பணியில் ஈடுபட்ட 14 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படை கைது செய்தது.

காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற ரோந்து கப்பல் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகுகளில் இருந்த 14 இலங்கை மீது உள்ள கைது செய்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்களும் முழுமையான விசாரணைக்கு பின்னர் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வேதாரணியத்துக்கு வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் இலங்கை இலங்கை பருத்தித் துறையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது வேதாரணியம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாஸ்போர்ட் ஆக்ட் மற்றும் ஃபாரினர்ஸ் ஆக்ட் ஆகிய பிரிவுகளின் பில் வழக்கு பதிவு செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி