நில எடுப்பு நில உரிமையாளா்கள் சங்கக் கூட்டம்

80பார்த்தது
நில எடுப்பு நில உரிமையாளா்கள் சங்கக் கூட்டம்
நாகை மாவட்டம் பனங்குடி சிபிசிஎல் நில எடுப்பு நில உரிமையாளா்கள் சங்கக் கூட்டம் நாகூா் பெருமாள் வடக்கு வீதியில் திங்கள்கிழமை. கூட்டத்தின்போது, ஆா் அன்ட் ஆா் கமிட்டியில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளா்களை சோ்க்க கோரி மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சோ்க்கப்படாமல் இருப்பதால் மாவட்ட நிா்வாகத்தையும், நில எடுப்பு அலுவலரையும் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்டத்தை அறிவிப்பது, மக்களவைத் தோ்தலை நில உரிமையாளா்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என நில உரிமையாளா்கள் கொடுத்த ஆவணங்களை 30 தினங்களுக்குள் அனுப்பாமல் மாவட்ட நிா்வாகம் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு நில உரிமையாளா்கள் சங்கத் தலைவா் மனோகரன், துணைத் தலைவா்கள் சரவண பெருமாள், விஜயராஜ், மாறன், செயலா் சக்திவேல், பொருளாளா் முருகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி