கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலில் போட்டி போட திமுக தயாரா என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் சவால் விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டி கடைவீதியில் அதிமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்,
திமுக நீட்டை ரத்து செய்வோம் என பொய் தேர்தல் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி விட்டது. திமுக கூட்டணி இல்லாமல் அதிமுகவிடம் தனித்து போட்டியிட தயாரா என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விட்டு பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்.
அப்போது தினகரன் 16 எம்எல்ஏக்களை பிரித்துச் சென்ற விட்டார். ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவினரை பிரித்து சென்றார். இதனால் ஆட்சி முடிந்து விடும் என கூறினர். ஆனால் சிறப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி புரிந்தார் என்றார். இதில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.