மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாம்

56பார்த்தது
மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருமருகல் வட்டார கல்வி அலுவலர் ரவி கலந்துக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் இதுவரை ஆதார் எடுக்கப்படாத மாணவர்களுக்கு புதிய ஆதார், ஆதாரில் பெயர், முகவரி திருத்தங்கள் மற்றும் கைரேகை பதிவு விடுபட்டிருந்தால் புதிதாக பதியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரபு, துர்க்கா ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி