மயிலாடுதுறை: இணையவழிக் குற்றங்களுக்கு எதிராக துரித நடவடிக்கை

59பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில், இணையவழிக் குற்றங்களுக்கு எதிராக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் இணையவழிக் குற்றங்கள் மூலம் பணத்தை இழந்த 563 நபர்கள் அளித்த புகார் தொடர்பாக, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ. 9,39,323 பணம் மீட்கப்பட்டு, உரியவரிடம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், இணையவழிக் குற்றங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ. 1,78,35,944 பணம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய வங்கிக் கணக்கின் மூலம் முடக்கப்பட்டுள்ளது. 

இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார் மனுக்களுக்கு 9 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால், நிகழாண்டில் தினசரி முறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 2,496 புகார் மனுக்களில் 1,953 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்கிய நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் 76,620 வழக்குகளும், குடிபோதையில் வாகனத்தை இயக்கிய நபர்கள் மீது 1,424 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி