மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 6. 20 மணிக்கு திருச்சி வழியாக சேலம் செல்லும் ரயில் அக்டோபர் 1ஆம் தேதி இன்று முதல் 8 பெட்டிகளில் இருந்து 12 பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது கோரிக்கை நிறைவேறியுள்ளதால் ரயில் பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.