பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அழைப்பு

74பார்த்தது
மயிலாடுதுறை நகரின் பல்வேறு பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு அழைப்பு விடுத்து மாவட்ட நம்மவர் கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். மேலும் கமலஹாசன் உருவ படத்துடன் ஏழாம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தடம் பதிக்க வரும் நம்மவரே மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அழைக்கிறோம் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முன்னதாக ஏழாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி