ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

71பார்த்தது
மயிலாடுதுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மையே சேவை இயக்கம் - 2024 முகாமில் 14 ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூய்மையே சேவை என்ற திட்டம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெறும் மெகா தூய்மை இயக்கம் ஆகும். இத்திட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் மன்னம்பந்தல், சித்தா்காடு, ஆணைமேலகரம், குளிச்சாறு உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் பணியாற்றிவரும் 75-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்களுக்கு இலவச மருத்துவ முகாம் மயிலாடுதுறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற முகாமில், மருத்துவா் ரவிக்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் தூய்மைப் பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி