நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை

70பார்த்தது
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு வார இறுதி நாட்கள் ஆன சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கையசைத்து வழி அனுப்பி வைத்தனர்

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு காலை 08. 05 மணிக்கு இதுவரை இயக்கப்பட்டு வந்த ரயில் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் மட்டுமே சென்று வந்தது இந்த ரயிலை அலுவலகம் மற்றும் மருத்துவ சேவைகளுக்காக திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் ஆகிய பெருநகரங்களுக்கு சென்று வந்த பயணிகள் அதிகம் பயன்படுத்தி வந்தனர் எனவே இந்த ரயிலை சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களிலும் நீட்டித்து வழங்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் இந்நிலையில் இந்த ரயில் சேவையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு நீடித்து மத்திய அமைச்சர் எல் முருகன் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் இதை எடுத்து சனிக்கிழமை ஆன இன்று காலை 08. 05 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து அந்த ரயில் புறப்பட்டு திருச்சியை நோக்கி சென்றது இதை எடுத்து ரயில் பயணிகள் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கை அசைத்து ரயிலை வழி அனுப்பி வைத்தனர்

தொடர்புடைய செய்தி