காலபைரவருக்கு சிறப்பு பூஜை

1111பார்த்தது
காலபைரவருக்கு சிறப்பு பூஜை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சீயாத்தமங்கை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி