வாஞ்சூர் சோதனை சாவடியில் எஸ்பி அதிரடி ஆய்வு

582பார்த்தது
வாஞ்சூர் சோதனை சாவடியில் எஸ்பி அதிரடி ஆய்வு
தமிழகத்தில் நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாகை மாவட்டத்தில் பணப்பட்டுவாடா மற்றும் வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நாகை மாவட்ட காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் புதுச்சேரி மற்றும் தமிழக மாநில எல்லையான வாஞ்சூர் சோதனை சாவடியில் தேர்தலை ஒட்டி நடத்தப்படும் வாகன தணிக்கை பணியினை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். தேர்தலையொட்டி  மேற்கொள்ளும் வாகன தணிக்கையினை முறையான வீடியோ ஒளிப்பதிவோடு செய்ய வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சோதனை சாவடிகளை கடந்து செல்லும் ஆட்டோ, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் இருசக்கர வாகனங்களையும்  முறையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட அவர், சட்ட விரோதமாக எந்தவித பணமோ, பொருளோ கடத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறிட கூடாது. தேர்தலை நேர்மையான முறையில் நடக்க ஒவ்வொருவருக்கு பங்கும் இன்றியமையாது என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என காவலருக்கு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி