தரங்கம்பாடி அருகே கடற்கரையில் மீனவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரைச் சோ்ந்த பாவாடை சாமி மகன் சத்யராஜ் (28). திருமணம் ஆகாதவா் இவா் ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில் இருந்தாராம். இதையடுத்து, மதியம் கடற்கரையில் மயங்கி கிடந்த சத்தியராஜை கிராமத்தினா் மீட்டு தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சத்தியராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.