சிம்புவுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்குர்?

64பார்த்தது
சிம்புவுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்குர்?
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை மிருணாள் தாக்குர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளையொட்டி படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. படத்தில் இரண்டு கேரக்டர்களில் சிம்பு நடிப்பது போஸ்டர் மூலம் தெரியவந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி