மெட்ரோ ரயில் நிலைய சுவர் இடிந்து விழுந்து விபத்து

54590பார்த்தது
டெல்லியில் உள்ள கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை மெட்ரோ பக்கவாட்டு ஸ்லாப் இடிந்து விழுந்தது. விபத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி