பல்வேறு நாடுகளில் பரவிவரும் 'MPox' எனப்படும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனையில் ஈடுபட்டார். குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் நோய் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனையில் ஈடுபட்டார்.