தென் - வட இந்தியர்கள் இடையே பிரிவினையை உண்டாக்கும் விதமாக பேசிய மோடி

51பார்த்தது
தென் - வட இந்தியர்கள் இடையே பிரிவினையை உண்டாக்கும் விதமாக பேசிய மோடி
தென்னிந்திய மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும் போது, அபத்தமான சொற்களைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேச மக்களை இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தினர் என உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு தென்னிந்தியர்கள் மற்றும் வட இந்தியர்கள் இடையே பிரிவினையை உண்டாக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த நான்கு கட்ட தேர்தல்களில் இந்து - முஸ்லிம் பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது