'ஜெய்ஸ்ரீராம்' சொல்வதை தவிர்த்த மோடி (Video)

13389பார்த்தது
மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில் அது பொய்த்து போனது. இந்த கூட்டணி 292 இடங்களையே பிடித்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். அவர் தனது உரையை தொடங்கிய போது “ஜெய் ஸ்ரீராம்” என கூறுவதை தவிர்த்துவிட்டு ஜெய் ஜெகன்நாத் என கோஷம் போட்டார். நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி