தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சுய உதவிக்குழு மகளிர், வளரிளம் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், பாலினம், வளரிளம் பருவம், ஆரோக்கியமான இனப்பெருக்கம், பெண்கள், மாணவிகளுக்கான ஊட்டச்சத்து, கருப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.