தமிழகத்தில் புரோக்கரால் நின்றுபோன திருமணம்

61பார்த்தது
தமிழகத்தில் புரோக்கரால் நின்றுபோன திருமணம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 29 வயது மணமகன் ஒருவருக்கு, 23 வயது பட்டதாரி பெண் ஒருவரை திருமண புரோக்கர் பார்த்து கொடுத்துள்ளார். இதில் மணமகன் வீட்டில் பெண் வீட்டார் 10 பவுன் போடுவார்கள் என கூறியுள்ளார். அடுத்து பெண் வீட்டில் மணமகன் வீட்டார் பெண்ணுக்கு 25 பவுன் நகை போடுவார்கள் என கூறியுள்ளார். சரி என பேசி முடித்து நிச்சியதார்ததையும் முடித்துள்ளனர். அப்போது எனக்கு வேறு வேலை இருப்பதாக கூறி மணமக்கள் வீட்டில் தலா 1 லட்சம் கமிஷன் வாங்கிக்கொண்டு புரோக்கர் எஸ்கேப் ஆகியுள்ளார். இதனையடுத்து நகை குறித்து பேசும்போது நாங்கள் அப்படி கூறவே இல்லையே என இரு தரப்பினரும் கூறியுள்ளனர். இதனால் நிச்சயத்தோடு போகட்டும் என திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி