பிரதமர் மோடி வழங்கிய மந்திரம் (Video)

79பார்த்தது
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24 தொடங்கியது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று (ஜுலை 1) தொடங்கியது. இன்றும் (ஜூலை 2) கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இன்று, பிரதமர் எங்களுக்கு மிக முக்கியமான ஒரு மந்திரத்தை வழங்கினார். ஒவ்வொரு எம்.பி.யும் தேசத்திற்கு சேவை செய்வதற்காகவே சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேசத்துக்குச் சேவை செய்வது நமது முதல் பொறுப்பு.இதைத்தான் பிரதமர் வலியுறுத்தினார்.” என்றார்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி