செக்காணூரணி சாலை விபத்தில் இளைஞர் பலி.

1070பார்த்தது
செக்காணூரணி சாலை விபத்தில் இளைஞர் பலி.
மதுரை அருகே செக்காணூரணியில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் பலியானார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த அன்பழகனின் மகன் பவித்ரன் (19) என்பவர் தனது நண்பரான கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த கண்ணனுடன் (18) இரு சக்கர வாகனத்தில் மதுரை- தேனி சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.

செக்கானூரணி அருகே உள்ள தனியார் பள்ளி முன் இவர்களது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கண்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பவித்ரன், கார் ஓட்டுநர் ஆகியோர் மீது செக்கானூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி