மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி நகர் கழக நிர்வாகிகளுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று (நவ. 11) முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயக்குமார். ,
அதிமுகவினர் வன்முறையை கண்டால் அஞ்சி ஓடுகிறவர்கள் அல்ல, வன்முறை என்றால் அல்வா சாப்பிடுவதை போல அதை எதிர்கொள்ள தயாராக இருப்பவர்கள்.
எல்லோரும் இந்த மண்ணில் பிறந்தவர்கள், எல்லோரும் வீர மங்கை வேலு நாச்சியார் வழி வந்தவர்கள், எல்லோருக்கும் எல்லாம் தெரியும் ஆனாலும் மௌனமாக இருக்கிறோம்.
வன்முறை என்பது கூர்மையான ஆயுதம், ஒரு பகுதியில் உள்ள கூர்மையான ஆயுதத்தை வன்முறையாளர்கள் கையில் எடுத்தால் மறுபகுதி இருக்கும் கூர்மையான ஆயுதம் அதை பயன்படுத்த தயாராக இருக்கிறது என்பதை மட்டும் வன்முறையாளர்கள் மறந்துவிட கூடாது என்பதை பாடம் எடுக்கிறோம்.
வன்முறையால் ஒரு கட்சியை வளர்க்க முடியுமா என்றால் இல்லை, முதன்முதலிலே அதிமுக நாடாளுமன்ற தேர்தலை திண்டுக்கல்லில் சந்தித்த போது, ஆளும் கட்சியாக இருந்த திமுக, காங்கிரஸ் கட்சியை தாண்டி, அன்று 6 மாத பச்சிளம் குழந்தையாக இருந்த அதிமுக வெற்றி வாகை சூடியது. , அப்போது பார்க்காத வன்முறையா, வத்தலக்குண்டு ஆறுமுகம், சுதாகரன் போன்றவர்கள் உயிர் தியாகம் செய்து தான் இந்த இயக்கத்தை வளர்த்தார்கள் என்ற வரலாறு தெரியும் என்று பேசினார்.