மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழுமலை அருகே உள்ள சின்ன கட்டளை கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமியின் மகள் பெத்துமணியம்மாள் (27) என்பவர் எழுமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 30ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எனவே பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே நேற்று (நவ. 5) அவரது தாயார் முத்துலட்சுமி எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செவிலியரை தேடி வருகின்றனர்.