16-வது நிதிக்கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாட்கள் பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இராமநாதபுரம் செல்வதற்காக நேற்று (நவ. 19) மாலை மதுரை விமான நிலையம் வந்த குழுவினருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் காவல் துறை அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து மத்திய நிதி கமிஷன் குழுவினர் இராமநாதபுரம் புறுப்பட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து இன்று நிதி கமிஷன் குழு அங்கு தனுஷ்கோடி மற்றும் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை பார்வையிடுகின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை நிதி கமிஷன் குழுவினர் நேரில் பார்வையிட உள்ளனர்.