மதுரை அருகே திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்துத்தேவர் 129வது ஜெயந்தி விழா, பள்ளியின் 67ம் ஆண்டு விழா, பெற்றோர் ஆசிரியர் கழக விழா நடைபெற்றது.
ஆண்டுவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நாட்டுப்புற கலைகள், மேற்கத்திய இசை, நடனப் போட்டிகள் நடைபெற்றது.
500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதில் 200 மாணவர்கள் பரிசுகளை வென்றனர். கடந்தாண்டு நடந்த பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு திருநகர் லயன்ஸ் சங்க ஜெகநாதா ராஜா, நடன குருநாதன் பரிசு வழங்கினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுந்தரம், மணி அரசன், பொதுத் தேர்வுகளில் 100 சதவித தேர்ச்சி பெற்றுக் கொடுத்த வகுப்பாசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.