மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் நேற்று இரவு (அக். 21) விற்பனை முடித்துவிட்டு ஊழியர்களான ராஜ்குமார், விஜயகுமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர், ஆட்டோவில் மேலூர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து தாக்கிவிட்டு ஊழியர்கள் வைத்திருந்த ரூ1. 85 இலட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று உள்ளனர்.
இதில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தாக்கியதில் டாஸ்மார்க் ஊழியர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.