மதுரை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் கிராம கோயில் பூசாரி அருள் வாக்கு அருள்வோர் பேரவை சார்பில் மாவட்ட நிர்வாக கூட்டம் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் கணேசன், ரமேஷ்பாபு, வேலுமணி, அண்ணாதுரை, மலைச்சாமி முன்னிலை வகித்தனர். தமிழக அரசு கோயில்களுக்கும் பூசாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.