தெற்கு வாசலில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட இருவர் கைது.

74பார்த்தது
தெற்கு வாசலில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட இருவர் கைது.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் முன் விரோதத்தில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மதுரை தெற்குவாசல் காஜா தெருவைச் சேர்ந்த பாண்டி (31). வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கரடி பாண்டி (44). இருவருக்கும் காஜா தெருவில் விநாயகர் சிலை வைத்ததில் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற் றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற் பட்டது. இருவரும் கத்தியால் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.