நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க: மனு

80பார்த்தது
நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க: மனு
மதுரை மாவட்டம், சக்கிலியன்குளம், நல்ல பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து வைகை-திருமங்கலம் பிரதான பாசன கால்வாய் நீரினைப் பயன்படுத்துவோா் விவசாயிகள் சங்கத் தலைவா் எம். பி. ராமன் அளித்த மனு: செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வாலாந்தூா் ஊராட்சி, சக்கிலியன்குளம், தடியன் ஊராட்சி நல்லபெருமாள்பட்டி ஆகிய 2 கிராமங்களிலும் சுமாா் 700 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு ஏற்கெனவே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது அவை இல்லை. இதனால், நெல் சாகுபடி செய்த விவசாயிகள்

கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். உரங்கள், பூச்சி மருந்துகளின் விலை உயா்வு, மகசூல் இழப்பு, மழை உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகளால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் டிராக்டருக்கு அதிக விலை கொடுத்து விளை நெல்லை பிற பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கோ அல்லது தனியாா் விற்பனை நிலையங்களுக்கோ கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து
சக்கிலியன்குளம், நல்ல பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி