மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மல்லப்புரத்தைச் சேர்ந்த நோயாளி சேகர், என்பவர் நெஞ்சுப்பகுதியின் மகாதம இரத்தக்குழாய் வீக்கமடைந்து வெடிக்கும் தருவாயில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு புறக்கணித்த நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு பரிசோதனை செய்த போது அவருக்கு மாரடைப்பு இருதய இரத்தக்குழாய் அடைப்பும் இருதய பாதிப்பும் ஏற்கனவே இருப்பது கண்டறியப்பட்டது.
மூன்று சிக்கலான சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் குழு, இருதய சிகிச்சை நிபுணர் குழு, மயக்க மருந்து நிபுணர்கள் குழ, ஒன்றிணைந்து கழுத்து பகுதி பைபாஸ் இருதய ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்திற்கான ஸ்டென்ட் சிகிச்சை மூன்றையும் ஒரே தடவையாக எட்டு மணிநேரம் கேத்லேப் மற்றும் அறுவை சிகிச்சை அறையில் வைத்து மூன்று சிகிச்சைகளையும் ஒரே தடவையில் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள அறுவை, அரங்கு HYBRID OT எனப்படும் அதீத அறுவை அரங்கம் தென்தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. மேலே உள்ளது போன்ற மிகச் சிக்கலான சிகிச்சை முறைகள் இந்த HYBRID Or இல் எளிதாக செய்ய முடியும் என்பதையும் பொது மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.