தமுக்கம் மாநாட்டு அரங்கம்: ஆன்லைன் மூலம் முன்பதிவு
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையம் அரங்கத்தை இணைய வழி மூலம் முன்பதிவு செய்வதற்கான சேவையினை மாநகராட்சி மேயர் இந்திராணி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் நேற்று துவங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன் மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இனி தமுக்கம் மாநாட்டு மைய அரங்கம் முன் பதிவுகளை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யும் வசதி பெற்றுள்ளது இதனை பொதுமக்கள் விழா நிகழ்ச்சி நடத்துபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.