மதுரை: வெடி விபத்து குறித்து முதன்மை மருத்துவர் கிம் பேட்டி

59பார்த்தது
மதுரையில் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட கண் காயங்களால் 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டு பார்வை பறிபோனது என அரவிந்த் கண் மருத்துவமனை தகவல் தெரிவித்திருந்தது.

சம்பவம் குறித்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி கிம் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறும்போது,

மதுரையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு கருவிழியின் பாதிப்பு (corneal tear ) ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் மிகவும் வருத்தத்தக்க செய்தி என்னவென்றால் நான்கு குழந்தைகளுக்கு முற்றிலுமாக கண் பார்வை பாதிக்கப்பட்டு கண்கள் எடுக்கப்பட்டுள்ளது.
நான்கு பேரும் குழந்தைகள் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
மீண்டும் அவர்களுக்கு கண் பார்வை கிடைக்குமா என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது.

வருங்காலத்தில் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் கவனமாக இருப்பதைவிட அவர்கள் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


பார்வை என்பது வாழ்வின் மிக முக்கிய அங்கமான ஒன்று. கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் சரி செய்து விடலாம். முட்டை உடைந்தால் என்ன ஆகும் அதுபோல்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பத்திற்கும் மேற்பட்டோருக்கு வெவ்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். பெற்றோர்கள் கவனமாக குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி