உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை

7805பார்த்தது
உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை
மதுரையில் சாலை விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யபட்டது.

மதுரை தெற்கு வாசல் தெற்கு மாரட் வீதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகன் கார்த்திக் ராஜா (22) என்பவர் கடந்த 1ம் தேதி சத்திரப்பட்டி பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் செய்த கார்த்திக் ராஜா ஜியோ நெட் வொர்க் கம்பெனியில் பணியாற்றி உள்ளார். இவரது தந்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரிக்கார்டு கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அண்ணன் சந்தோஷ்(24) மற்றும் தங்கை பிரியதர்ஷினி (18) ஆகியோர் உள்ளனர்.

இவரது உடலுக்கு தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் இன்று மதியம் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே வடக்கு காவல் துணை ஆணையர் சிநேக பிரியா அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து தெற்கு வாசலில் அவரது வீட்டில் கார்த்திக் ராஜா உடலுக்கு தெற்கு வாசல் காவல் நிலையம் சார்பாக காவல் உதவி ஆய்வாளர்கள் கோடீஸ்வர மருது, கதிரேசன், சஞ்சிவி மகேஷ் மற்றும் முதல்நிலை காவலர் ராஜா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி