கண்மாய்களை காக்க உதவ முன் வந்த விவசாயிகள்

55பார்த்தது
கண்மாய்களை காக்க உதவ முன் வந்த விவசாயிகள்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடந்தது. நீர்வளத்துறை மற்றும் பஞ்சாயத்து கண்மாய்களில் பனை விதைகள் நடவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள பனை விதைகளை இலவசமாக தரலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.

அதில் பங்கேற்ற மதுரை கிழக்கு கார்சேரி விவசாயி குணசேகரன் ஒரு டிராக்டர் அளவு பனை விதைகளை இலவசமாக தருவதாக தெரிவித்தார். தற்போது 3, 500 விதைகளை இலவசமாக வேளாண் துறைக்கு குணசேகரன் வழங்கியுள்ளார்.

அவர் கூறியதாவது: கார்சேரியில் தாத்தா பாக்கியம் நட்ட 150 பனை மரங்களை அப்பா ராஜாமணி, தொடர்ந்து நான் பராமரித்து வருகிறேன். மானாவாரியில் வறட்சியால் பயறு சாகுபடியை நிறுத்தினாலும் இருக்கும் பனை மரங்களை அழியாமல் பாதுகாக்கிறேன். மரத்தில் இருந்து நுங்கு எடுப்பதில்லை. அவை பனம்பழமாகி கீழே விழும். மாடுகள் அப்பழத்தை தின்று கொட்டையை துப்பிவிடும்.

இப்படி 3500 விதை கொட்டைகளை சேகரித்து கொடுத்தேன். இன்னும் 2000 கொட்டைகள் சேகரித்து வருகிறேன். ஒரு மரத்தில் இருந்து அதிகபட்சம் 500 விதைகள் கிடைக்கும் என்பதால் எங்களைப் போன்ற விவசாயிகள் தாராளமாக விதைகளை கொடுத்து உதவலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி