மத்திய பாஜக அரசு நாடகமாடுகிறது - கே. பாலகிருஷ்ணன்

70பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மறைந்த பி. ராமமூர்த்தியின் சட்டப்பேரவை உரைகள் நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே பங்கேற்று நூலை வெளியிட்டார். மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: மத்திய பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் அனைத்து நிலைகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. நாடு முழுவதும் ஒருவிதமாக கொந்தளிப்பில் உள்ளது. மக்களின் அத்தியாவசிய பிரச்னைகள், வேலை வாய்ப்பின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு தோல்வியைடந்து விட்டது.

இதனால் தனது தோல்வியை மறைக்கவும், மக்களை கொந்தளிப்பில் இருந்து திசை திருப்பவும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. அரசியல் சாசனத்தில் உள்ளவற்றை மாற்ற வேண்டும் என்றால் மக்களவை மாநிலங்களவையில் பெரும்பான்மை இருக்க வேண்டும். ஆனால் மத்திய பாஜக அரசுக்கே பெரும்பான்மை இல்லை.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி அமல்படுத்த முடியும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநில அரசுகளே இல்லாமல் செய்து மத்தியில் அதிபர் ஆட்சிமுறையை அமல்படுத்தவே மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கையில் எடுத்துள்ளது என்றார்.

டேக்ஸ் :