மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மருத்துவமனை பிரிவு தனியார் மருத்துவமனைக்கு நிகராக உருவாகியுள்ளது.
இந்த குழந்தைகள் மருத்துவமனை பிரிவில் முழுவதிலும் குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்டு மருத்துவமனை போன்ற சூழல் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனை வளாகங்கள் முழுவதிலும் நிழல்தரும் மரங்கள் ஏராளமான வளர்க்கப்பட்டு அதற்கு கீழ் குழந்தைகள் விளையாடும் பூங்கா உருவாக்கப்பட்டு ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு , குழந்தைகள் ஓடி விளையாடும் பகுதி என குழந்தைகளின் மகிழ்ச்சியான இடமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு குழந்தைகளுக்கு ஒவ்வொரு நோய்களுக்கு ஏற்றவாறான தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு சிறப்பான முறையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளால் கூட சிகிச்சை அளிக்க முடியாத தீவிர நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கின்றனர்.
மதுரை மட்டுமல்லாமல் தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு உடனுக்குடன் தகுந்த சிகிச்சைகள் அளித்து பல்வேறு உயர்தர சிகிச்சைகளையும் இலவசமாக செய்து குழந்தைகளின் உயிர்காக்கும் மருத்துவமனையாக குழந்தைகளை மகிழ்ச்சிபடுத்தும் மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு செயல்பட்டு வருகிறது.