விபத்து: இளைஞருக்கு நடுரோட்டில் மருத்துவர் முதலுதவி

76பார்த்தது
விபத்து: இளைஞருக்கு நடுரோட்டில் மருத்துவர் முதலுதவி
விபத்து: இளைஞருக்கு நடுரோட்டில் மருத்துவர் முதலுதவி

மதுரை மஞ்சம்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் 26. இவர், சத்திரப்பட்டி - நத்தம் நான்குவழிச் சாலையில் சத்திரப்பட்டி அருகே டூவீலரை திருப்பினார்.

அப்போது நத்தம் நோக்கி விரைந்து வந்த கார் அவர் மீது மோதியதில் துாக்கியெறியப்பட்டார். ஒரு கால் முறிந்து, எலும்பும், நரம்பும் துண்டித்து தொங்கிய நிலையில் ரோட்டில் துடித்துக் கொண்டிருந்தார். ரத்தமும் ஏராளமாக வெளியேறியது. அவ்வழியாக வந்தவர்கள் தயங்கி நின்றனர். அவ்வழியாக டாக்டர் நாராயணசாமி காரில் வந்தவர்.

உயிருக்கு போராடிய செல்வக்குமாருக்கு உடனே சில முதலுதவி சிகிச்சை அளித்தார். முறிந்து தொங்கிய காலில், அப்பகுதியில் கிடைத்த தென்னை மட்டையை வைத்து கட்டி ரத்தக் கசிவை கட்டுப்படுத்தி சிகிச்சை அளித்தார். ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நடுரோட்டில் விபத்தில் இளைஞருக்கு உரிய நேரத்தில் கிடைத்த சிகிச்சையால் உயிர் தப்பினார். பொதுமக்கள் அவரை பாராட்டினர். சத்திரபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி