தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை

59பார்த்தது
தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை
மதுரை, சோழவந்தானில் ஆர். எம். எஸ். காலனி பகுதியில், சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான் அருகே உள்ள விரிவாக்கப் பகுதியான ஆர். எம். எஸ். காலனி முன்பகுதியில் சாலையில் அமைக்
கப்பட்டுள்ள தடுப்புகளால் விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரி
விக்கின்றனர்.

குறிப்பாக, சோழவந்தானிலிருந்து, இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோகளில் செல்பவர்கள் சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் மோதி செல்வதால், சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது.

அதுவும் இரவு நேரத்தில் மதுரையிலிருந்து வருபவர்கள், வாகனத்தில் வேகமாக வரும் போது அந்த இடத்தில் மின்
விளக்குகள் இல்லாததால், தடுப்புகளை கவனிக்காமல் மோதி கீழே விழும் சூழ்நிலை உள்ளது. ஆர். எம். எஸ். காலனியில், இருந்து வரும் வாகனங்களும் உடனடியாக திரும்பும் போது தடுப்புகளில் மோதி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஆகையால், சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளை அகற்றி விபத்துகளை தடுக்க
வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி