சமயநல்லூரில் கழிவுநீர் வாய்கால் கட்டகோரி சாலை மறியல்

52பார்த்தது
சமயநல்லூரில் கழிவுநீர் வாய்கால் கட்டகோரி சாலை மறியல்
பரவை அருகே சமயநல்லூரில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் இறந்தவர்களின் இறுதி ஊர்வலப் பாதை தொடர்பான பிரச்சனைகள் காரணமாக பொதுமக்கள் நேற்று (நவம்பர் 28)  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பொது மக்களின் கோரிக்கைகள்: கழிவுநீர் வாய்க்கால் பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும். இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும் பாதையை மீண்டும் திறந்து தர வேண்டும். போராட்டம்: பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கலைத்தனர். சமயநல்லூர் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் இறுதி ஊர்வலப் பாதை பிரச்சனைகள் நீண்ட காலமாக உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி