6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்

61பார்த்தது
6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில், தேனி நாடாளுமன்ற தி. மு. க கூட்டணி கட்சி வேட்பாளர் தங்க தமிழ்ச்
செல்வனை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: -

வருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமது இந்திய கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு நாங்க எல்லாம் இங்கே வருகை தந்துள்ளோம். இந்திய கூட்டணி ஆட்சியை அமைத்து அன்புக்குரிய பாசத்துக்குரிய காங்கிரஸ் தலைவர்களின் முன்னணியின் இருக்கின்ற ராகுல் காந்தி அவர்கள் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்று, அதனால் உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் தங்க தமிழ்ச்
செல்வனுக்கு வாக்களிக்க. வேண்டும் என்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடியவர். உங்கள் குறைகளை எல்லாம் கேட்பவர் தங்க மனம் படைத்த தங்க தமிழ்ச்
செல்வன் தான். அதனால்,
உங்களுடைய பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆறு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தேர்தல் முடிவின் போது சோழவந்தான் தொகுதியில்
தான் அதிக வாக்களித்த தொகுதியாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி